தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக 354 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக 2500 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக புதிய ரோந்து வாகனங்களை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் விஜய் அதற்கான லோகோவையும் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், இந்த திட்டம் என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒரு திட்டம்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சிறிதளவு கூட சகித்துக் கொள்ள முடியாது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கேட்டு கேட்டு என் மனம் பதறுகிறது. இது காலம் காலமாக நடக்கும் நிலையில் எதனால் நடக்கிறது என்று ஆராயும்போது எல்லாமே போதைப் பொருளால் தான் நடக்கிறது என்பது தெரிய வருகிறது. இன்று இந்த பிரச்சனை புதுசா கிளம்பி வரல காலம் காலமா நடக்குது. அதை கண்டுக்காம விட்டதுதான் முதல் காரணம்.
பெண்களை தொந்தரவு செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களை எச்சரிக்கிறேன். பெண்களை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதான தண்டனை மிகக் கடுமையாக இருக்கும் என்று முதல்வர் கூறினார். மேலும் முதல் முறையாக இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ட்ரோன் மூலமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் சிங்கப்பெண் சிறப்புப்படை வீரர்கள் டிரோன் மூலமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
