சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை லோகோவை வெளியிட்ட அவர் புதிய ரோந்து வாகனங்களையும் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய விஜய் பெண்கள் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது இது பற்றிய செய்திகளை கேட்டாலே என்னுடைய மனம் பதறுகிறது. இதற்கெல்லாம் முழு காரணம் போதைப் பொருள்தான் இந்த விஷயம் காலம் காலமாக நடப்பதாகவும் அதனை தடுக்காமல் விட்டதுதான் தவறு எனவும் கூறினார்.
சிங்கப்பெண்ணே.. சிங்கப்பெண்ணே.. ஆணினமே உன்னை வணங்குமே!#Singappen #SingappenSpecialTaskForce #CMVijay #SpecialTaskForce #TamilNews #NewsTamil24x7 pic.twitter.com/VaFal5IQpT
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) June 9, 2026
முன்னதாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் அணிவகுப்பு நடத்தி முதல்வர் விஜய்க்கு மரியாதை செலுத்திய நிலையில் அவரும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது பேண்ட் வாசிக்கப்பட்டது. அப்போது அவர்கள் பிகில் படத்தில் வரும் சிங்க பெண்ணே மற்றும் ஆளப்போறான் தமிழன் போன்ற பாடல்களின் வாக்கியங்களை பேண்டு குழுவினர் வாசித்தனர். மேலும் இதனை கைத்தட்டி முதல்வர் விஜய் உற்சாகமாக ரசித்து கேட்டார். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
