சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. துணைவேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களுக்கும், மாநில அரசின் உத்தரவுகளுக்கும் ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எனவே, மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என அரசு வழக்கு தொடுத்துள்ளது.