சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 28 பேர்‌ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள் கூட சிலர் சிக்கினார். இந்த வழக்கில் 25 பேர் மீது இதுவரை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியான சிசீங் ராஜாவை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 29 வது நபராவார். மேலும் அண்மையில் சிசீங் ராஜாவை ‌ போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.