ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மத்திய அரசு மக்களவையில் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதாவின் படி, ஆன்லைனில் பணம் கட்டி சூதாடினால், அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், ஆன்லைனில் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரம் செய்வது கூட குற்றமாகக் கருதப்படும்.

அத்தகைய விளம்பரங்களில் ஈடுபட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் நிதி சிக்கலில் சிக்கி வருவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.