ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க இருக்கிறார். அதாவது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 88 இடங்களை தாண்டி தற்போது 134 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதனால் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 4-வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. அதன் பிறகு ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இதனால் பவன் கல்யாண் எதிர்க்கட்சித் தலைவராக அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.