சேனை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து நாள்தோறும் 2310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தீபாவளி, பொங்கல் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாகவும் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளில் பயணிக்க 20 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கிளாம்பாக்கம் முதல் திருச்சிக்கு 320 ரூபாய் முதல் 430 ரூபாய் வரை கட்டணம் பெறப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.