சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்டார்.. இதையடுத்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே முதல்வர் ஸ்டாலின்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

மேலும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு (routine health checkup) பின் நாளை, அதாவது இன்று வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. சிகிச்சை முடிந்து முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பினார்..