பொதுவாகவே நம்முடைய செல்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடிப்பதற்கு காவல்நிலையில் சென்று புகார் அளிப்பது வழக்கம். இந்த நிலையில் தொலைந்து போன அல்லது திருடு போன செல்போன்களை குறித்து புகார் அளிப்பதற்கு வேலூர் காவல் துறையினர் செல் டிராக்கர் என்ற புது செல்போன் ஆப்பை அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த செயலியின் மூலமாக தொலைந்த செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து கொடுக்கப்படுகிறது. மேலும், 9486214166 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உரிமையாளரின் விவரத்துடன் ஐஎம்இஐ எண்ணை அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி செல்போனை தொலைத்தவர்கள் அது குறித்து whatsapp அல்லது செயலி மூலமாக புகார் அளித்தாலே போதும் என்றும் காவல் நிலையம் செல்ல தேவையில்லை என்றும் வேலூர் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.