தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்று (அக்.15) நடைபெற்ற கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடந்தது.

இதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, மாநில அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். கரூர் சம்பவத்தில் முறையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், இதற்குப் பிறகும் மாநில அரசு பொறுப்பை ஏற்காதது வருத்தமளிக்கின்றது என்றும் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில்,

அப்போது, திமுக அமைச்சர் சிவசங்கர், கரூர் சம்பவத்துடன் இணைத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எடுத்துக்காட்டினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இது தற்போதைய விவாதத்துடன் தொடர்பில்லாத உரை எனக் கூறி அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக எழுந்த குழப்பத்தையடுத்து, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பை மேற்கொண்டனர். இந்த பரபரப்பு சூழல் சில நேரம் சட்டமன்ற நடவடிக்கையை பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது