கடந்த இரண்டு நாட்களாக அதிமுக முக்கிய புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளதாக செய்தி வெளியான நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 2.15 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் அதிமுகவில் சேர உள்ளதாக அம்மன் அர்ஜுனன் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். அந்த இரண்டு பேர் யார் என்ற விவரம் கூறவில்லை. வேலுமணி உள்ளிட்டோர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு பதிலடி கொடுக்க இந்த தகவல் கசிய விட்டதா என கேள்வி எழுந்துள்ளது.