தமிழகத்தில் 73 வருட அரசியல் வரலாற்றை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மாற்றி அமைத்துள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டிகள் நிலவியது. கிட்டத்தட்ட தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்னும் ஆட்சி அமைக்க பத்து இடங்கள் தேவைப்படுகிறது. இதனால் எந்த கட்சியிடம் அவர்கள் ஆதரவு கோர போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த நிலையில் அதிமுக கட்சியில் சேர்ந்தவுடன் லால்குடி தொகுதியில் போட்டியிட பிரபல தொழிலதிபர் லீமா ரோஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

தற்போது இவர் 2731 வாக்குகள் வித்தியாசத்தில் லால்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இதேபோன்று திருவண்ணாமலை ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜய்சுதா வெற்றி பெற்றுள்ளார். ஓசூர் தொகுதியில் அதிமுக கட்சியின் வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். மேலும் குன்னூர் தொகுதியில் திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்ட கேஎம் ராஜு வெற்றி பெற்றுள்ளார்.