தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தில் இன்று ஓபிஎஸ் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தனி கட்சி தொடங்கும் எண்ணமில்லை என்றார். அவரிடம் நிருபர்கள் தனி கட்சி ஆரம்பிக்கப் போகிறீர்களா என்று கேட்டதற்கு நான் எந்த சூழ்நிலையிலும் எந்த இடத்திலும் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்று கூறவில்லை உங்களுடைய கேள்வியே தவறு என்றார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையை இணைந்தது பற்றிய கேள்விக்கு நான் செங்கோட்டையனை இதுவரை தொடர்பு கொண்டு பேசவில்லை என்றார்.

அதன் பிறகு அடுத்த கட்ட நகர்வு குறித்த கேள்விக்கு கட்சி மற்றும் கழகத் தொண்டர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றார். முன்னதாக டிசம்பர் 15ஆம் தேதி ஓ பன்னீர்செல்வம் தனி கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அப்படி இல்லை எனில் தமிழக வெற்றி கழகத்தில் அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணைவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் அவர் தனி கட்சி ஆரம்பிக்க போவதாக வந்த தகவல்களை மறுத்துள்ளார். மேலும் முன்னதாக அவர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியதால் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக ஒரு செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.