கேரள மாநிலம் மூணார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டரான ஒருவர் வசித்து வருகிறார். இதன் காரணமாக இவர் தன்னுடைய மகளுக்கு சோனியா காந்தி என்று பெயரிட்டார். அதே நேரத்தில் மகள் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் அல்லாமல் பாஜகவில் இணைந்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவராக இருந்த குமரி ஆனந்தன் மகள் தமிழிசை சௌந்தர்ராஜன் தந்தை வழியை விட்டுவிட்டு எப்படி பாஜகவில் சேர்ந்தாரோ அதேபோன்று தந்தை வழியை விட்டுவிட்டு அவருடைய மகள் சோனியா காந்தி பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில் தற்போது சோனியா காந்திக்கு பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. அதன்படி மூணாறு பஞ்சாயத்து பதினாறாவது வார்டில் அவர் போட்டியிடுகிறார். மேலும் சோனியா காந்தி என்ற பெயர் கொண்ட அந்த பெண் தற்போது பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டுயிடுவது மிகவும் வித்தியாசமாகவும் சுவாரசியமான சம்பவமாகவும் மாறியுள்ளது.
