தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராசலம் பகுதியில் புதிதாக ஒரு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி கட்டிடம் தற்போது திடீரென சரிந்து விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென இந்த விபத்து நடந்தது. ‌மேலும் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தற்போது மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்ற வருகிறது.