வடகிழக்கு பருவமழை காரணமாக பொதுமக்கள் அவதிப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நவம்பர் மாதத்திற்கான ரேஷன் அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், அக்டோபர் மாத ஒதுக்கீடாக 12 முதல் 35 கிலோ வரை அரிசியை ஏற்கனவே பெற்றுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும், தங்களின் நவம்பர் மாதத்திற்கான அரிசியையும் இம்மாதமே ரேஷன் கடைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் இடையே ரேஷன் விநியோகத்தில் இடையூறு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
