புதுச்சேரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்ட பகுதியில் வட்டாட்சியர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் ரங்கசாமி, நேரில் சென்று ஆய்வு நடத்தவும் உள்ளார். முன்னதாக புகார் கொடுத்ததும் சாக்கடையை சுத்தம் செய்யவில்லை என கூறப்பட்ட நிலையில், சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.