தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட்டது. இந்த பணிகள் ஜனவரி 13ஆம் தேதி நிறைவடையாததால்  இன்று மாலைக்குள் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மீதமுள்ளவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் ஜனவரி 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பெற்று கொள்ளலாம் என்றும் தற்போது அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் 15 சதவீதம் பேர் இன்னும் பொங்கல் பரிசு பெறாத நிலையில் ஜனவரி 25ஆம் தேதி வரை அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு பொங்கல் பரிசு தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.