சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1440 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,12,320 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15316 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,22,528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
