பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிப்ட் பழுதானதால் சுமார் 15 நிமிடங்கள் அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக்கொண்டார். அமைச்சர் சிவசங்கர் லிப்ட்டில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் அமைச்சர் சிவசங்கர் லிப்டில் ஏறி முதல் தளத்துக்கு சென்றபோது திடீரென லிப்ட் பழுதாகி பாதியில் நின்றது. இதன் காரணமாக அமைச்சர் சிவசங்கர் 15 நிமிடங்கள் லிப்டில் மாட்டிக் கொண்டார்.