புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். கருணாநிதியின் நம்பிக்கையை பெற்ற ராமச்சந்திரன் முதல்முறையாக புதுச்சேரி வரலாற்றில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார்.

அதன் பிறகு திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான கடுமையான போட்டி நிலவியது. இதனை தொடர்ந்து 1990-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை ராமச்சந்திரன் முதல்வராக இருந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.