தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை நான் விலகியதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் பல பரபரப்பு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் காயத்ரி ரகுராமை தொடர்ந்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவரும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.