திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவினை காண தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் செல்வார்கள். வருகிற 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 8-ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 156 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.