திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பிரசித்தி பெற்றது லட்டு. பக்தர்கள் திருப்பதி சென்றால் லட்டு வாங்காமல் திரும்ப மாட்டார்கள். அப்படி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வாங்க பக்தர்கள் கவுண்டரில் காத்திருந்தனர். அப்போது 47 ஆம் நம்பர் கவுண்டரில் திடீரென கரும்புகை வெளியாக தொடங்கி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்துறை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து விபத்துக்கு காரணமாக இருந்த UPS இணைப்பைத் துண்டித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது அப்பகுதியில் சட்டு பதட்டத்தை ஏற்படுத்தியது.