தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.