தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்தவுள்ளார். ஆளுநர் இன்று காலை 10 மணி அளவில் ஆங்கிலத்தில் தன் உரையை வாசிப்பார். அதாவது, மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புது கொள்கைகள், புதிய திட்டங்கள் பற்றி அவர் உரை நிகழ்த்துவார்.

சுமார் 1 மணி நேரம் கவர்னர் உரை நிகழும். இதையடுத்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசிப்பார். காகிதமில்லாத சட்டசபை என்பதால் அவர்களின் உரைகள், சட்டசபையிலுள்ள தொடுதிரை கணினிகளில் திரையிடப்படும். இக்கூட்டத் தொடரின் போது ஆளும் கட்சி மீது எதிர்க் கட்சிகளான அதிமுக, பாஜக பல குற்றச்சாட்டுகளை எழுப்ப இருக்கிறது. சட்ட ஒழுங்கு, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, பரந்தூர் விமான நிலையம், விவசாயிகளுக்கு நிவாரணம் உட்பட பல பிரச்சினைகளை திர்கட்சிகள் இந்த கூட்டத்தொடரில் எழுப்ப தயாராக இருப்பதாக தெரிகிறது. அதற்கு முதல்வர், அமைச்சர்கள் பதிலளிப்பர். ஆகவே இந்த சட்டசபை கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.