கோரமண்டல் விபத்து  ஏற்பட்ட ஒடிசாவில் மேலும் ஒரு ரயில் விபத்துக்குள்ளானது..

ஜூன் 2, வெள்ளிக்கிழமை இரவு 7.20 மணிக்கு, பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே உள்ள பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.இந்த ரயில் விபத்து நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோரமண்டல் விபத்து  ஏற்பட்ட ஒடிசாவில் மேலும் ஒரு ரயில் விபத்துக்குள்ளானது.

ஒடிசாவின் பர்கார் என்ற பகுதியில் சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது.. சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகிய நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சம்ப இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணைநடத்தி வருகின்றனர்..