சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்து ஒரு சவரன் 1,05,240 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14351 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,14,808 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி 235 ரூபாய்க்கும், ஒரு சவரன் 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.