நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (02.02.2023) நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் விடுமுறை அறிவித்துள்ளார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.02.2023) மாவட்ட வருவாய் அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதையடுத்து தற்போது கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்..