ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி குறித்து ஜி கே வாசனையை அதிமுக மூத்த நிர்வாகிகள் குழு சற்று முன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பிறகு பேட்டி அளித்த ஜிகே வாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். கூட்டணி வேட்பாளர் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் அதிமுக போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.