அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை பைப்பாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனை முடிவு செய்துள்ளது. இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரம் அமலாக்கத்துறையின் கைதுக்கு பின் அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர்கள் கஸ்டடியில் எடுத்திருக்கும் நிலையில் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.