தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதன் பிறகு பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் லியோ படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா விமான நிலையத்திலிருந்து செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய் மற்றும் திரிஷாவுக்கு 5 நாட்கள் ஓய்வு கிடைத்ததுள்ளதால் இருவரும் சென்னைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது விஜய் மற்றும் திரிஷா மீண்டும் காஷ்மீரில் நடைபெறும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜய் மற்றும் திரிஷா சென்னைக்கு வந்ததால்தான் இயக்குனர் கௌதம் மேனன் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் இல்லை என்று சொல்லப்படுகிறது.