தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அதர்வா. இவர் தற்போது நிறங்கள் மூன்று என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நிலையில், நடிகர்கள் சரத்குமார் மற்றும் ரகுமான் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு தேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் நேற்று படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டார். அதன்படி நிறங்கள் மூன்று படத்தின் டிரைலர் வீடியோவை இன்று ஏ.ஆர் ரகுமான் மற்றும் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோர் வெளியிடுவார்கள் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது நிறங்கள் மூன்று திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த டிரைலர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.