தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கும் நிலையில், 3டி தொழிநுட்பத்தில் 10 மொழிகளில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது 60 சதவிகிதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சூர்யா 42 திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வட இந்தியாவில் இந்தி டப்பிங் உரிமை, திரையரங்கு மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் என 100 கோடி ரூபாய்க்கு பென் ஸ்டூடியோஸ் நிறுவனம் சூர்யா 42 படத்தை வாங்கியுள்ளதாம். மொத்தமாக சூர்யா 42 திரைப்படம் 500 கோடிக்கு மேல் ஃப்ரீ ரிலீஸ் வியாபாரம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் 400 கோடிக்கும் மேல் ஃப்ரீ ரிலீஸ் வியாபாரம் ஆன நிலையில் தற்போது லியோ படத்தை முந்தி சூர்யா 42 திரைப்படம் ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் புது சாதனை படைத்துள்ளது.