தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஓவியா. மாடலிங் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்த ஓவியா மலையாளத்தில் கங்காரு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் ஓவியா நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்த ஓவியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஓவியா-ஆர்வ் காதலால் ஓவியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியா மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகை ஓவியா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் ஒரு லைவ் வீடியோவை பதிவு செய்தார். அந்த வீடியோவில் ஓவியா பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென ஒருவர் ஓவியா அருகில் வந்து அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்தான் உங்கள் காதலாரா என்று கேட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Oviya (@happyovi)