நடிகை சமந்தா அண்மை காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஜிம் ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கால்களால் செய்யும் ஒர்கவுட் வீடியோ ஒன்றை பதிவுசெய்திருந்தார். அந்த அனைத்து வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது. இந்த நிலையில் உத்திரகாண்டில் உள்ள நடிகை சமந்தா அங்கு பாக்சிங் பயிற்சியெடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது வெளிவந்துள்ளது.

பாலிவுட்டில் அடுத்ததாக தான் நடிக்கவுள்ள சிடேட்டல் வெப் சீரிஸுக்காக இந்த பாக்சிங் பயிற்சி எடுத்து வருகிறாராம் சமந்தா. இந்த வெப் சீரிஸில் சமந்தா உடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். அதோடு தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தான் இந்த வெப் சீரிஸையும் இயக்குகிறார்கள்.