செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின்  வழக்கறிஞர் அணி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு,  இவ்வளவு சிறப்பா இருக்கு, இந்த அளவுக்கு டீப்பா இருக்கு  அப்படிங்கிறது  மாநில தலைவராக நானே பார்க்கின்றேன்.  அதனால் வருகின்ற காலத்தில் நம்முடைய அட்வகேட் அண்ணன் பால் கனகராஜ் அவர்கள் மூலமாக…  அண்ணன் வணங்காமுடி அவங்க எல்லாமே இந்த கேஸ்ல நம்ம கூட இருக்காங்க.

அவர்கள் மூலமாக TR. பாலு அவர்களுடைய குடும்பத்தினரையும் சம்மன் பண்ண வேண்டும் என்று  நம்ம கேட்க போறோம். ஏன்னா  நம்முடைய டிஎம்கே பைல்ஸ் பார்ட் – 1 இல்  TR பாலு அவர்கள்…  அவர்களுடைய குடும்பத்தினர் பெயரை வைத்திருக்கும்TRB ராஜா உட்பட…  அவருடைய மகன் ராஜ்குமார் உட்பட என எந்த குடும்பத்தையும் கூட அரசியல் மன்றத்தில் இழுக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் இல்லை.

 அதனாலதான் டிஎம்கே பார்ட்-1 பைல்ஸ்  போடும்போது கூட அவங்க புகைப்படத்தை….  குடும்பத்தினுடைய புகைப்படத்தை எங்கேயும் நாம கொடுக்கல. ஆனால் அவருடைய சத்திய பிரமாணத்தில எதுவும் இல்லை என்று சொல்லி இருக்கிறதனால,  நம்மகிட்ட இருக்க ரெக்கார்டுல அவங்களுடைய குடும்பத்தினர் சொத்து வச்சிருக்காங்க, கம்பெனி வச்சிருக்காங்க… அதனால அனைவரையுமே கோர்ட்டுக்கு வர சொல்ல போகின்றோம்.

அதனால் இங்க இருக்கக்கூடிய கனம் நீதிபதி அவங்ககிட்ட ரிக்வஸ்ட்  பண்ணி….   நாம சொல்லி இருக்கிறத ப்ரூப் பண்றதுக்கு TR. பாலு அவருடைய குடும்பம் மொத்தமே கூண்டில் ஏறவேண்டும்.வேற வேற காலகட்டத்தில் மகன் உட்பட… குடும்பம்  உட்பட… TR  உட்பட கூண்டுல ஏறனும். எங்களுடைய கேள்விகளுக்கு அவுங்க பதில் சொல்லணும். அவர்களுடைய கேள்விகளுக்கும் நாங்கள் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த போராட்டம் தொடர்ந்து நடக்கும் என தெரிவித்தார்.