தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அவர்களுக்கு வழங்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி ஒவ்வொரு வருடமும் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் நலத்துறையால் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவி தொகை பெறுவதற்கு தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் மாற்று திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் இதனை பெற தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் இ சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.