தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்றும் தற்போதைய டெக்னாலஜிக்கு தகுந்தது போல பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் கூடிய விரைவில் அமலுக்கு வரும். மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள நான்காயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காலியாக உள்ள பல்கலைக்கழக பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்படும் அறிவித்துள்ளார்.