விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியா ஒரு மதசார்புள்ள நாடாக மாறிவிட்டால், ஜாதி  மறுபடியும் நிலைப்படுத்தப்பட்டு விடும். சமூக நீதி அழித்து ஒழிக்கப்பட்டு விடும்.  பாலின, சமத்துவம் இல்லாமல் போய்விடும். மீண்டும் குலத் தொழிலிலுக்கே  மக்கள் திரும்ப நேரிடும்.

என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிஜேபி யாரைப் பற்றியும் கவலைப்படாது. இந்த கான்ஸ்டிடியூஷனை தூக்கி எறிஞ்சிட்டு, அவன் ஒரு கான்ஸ்டிடியூஷனை கொண்டு வந்து விடுவான். இப்போது சொல்லுங்கள் தோழர்களே… பிஜேபி வீழ்த்தப்பட வேண்டுமா ?  வேண்டாமா ? பிஜேபியை ஆட்சி அதிகார பீடத்தில் இருந்து துரத்தி அடிக்க வேண்டுமா ? வேண்டாமா ?

அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நாளே நாலு விஷயம் சொல்லி முடித்தது விடுகின்றேன்.

முதல் வேலை இதுவரையிலும் உங்களுக்கு தெரியாத வேலை அல்ல,  தெரிஞ்ச வேலை. ஆனால்  செய்யாத வேலை. அதைப்பற்றி எனக்கும் கவலை இல்லை,  அதனால உங்களுக்கும் கவலை இல்லை. இப்ப எனக்கு கவலை வந்துவிட்டது, உங்களுக்கும் கவலை வரணும். முதல் வேலை வாக்காளர் பட்டியலை எடுத்து அதை பார்க்க வேண்டும். என்னைக்காவது நாம இதை எடுத்து பார்த்திருக்கிறோமா ?  போலிங்க ஏஜென்ட் தான் போவான்.

அவன் மட்டும் தான் கைல வச்சிருப்பான். அந்த வார்டுல நூறு ஓட்டுனா…  அந்த 100 சீட்டு மட்டும்….  100 பேர் கொண்ட சீட்டு மட்டும் தான் அவன் கையில இருக்கும். மொத்த வாக்காளர் பட்டியலையும்…  அந்த பூத்துக்குட்பட்ட மொத்த வாக்காளர் பட்டியலையும்…  அதாவது அந்த ஊராட்சி… ஒன்றிரண்டு பூத் இருக்கும்… நான்கு பூத் இருக்கும்… வாக்காளர் பட்டியல் எடுக்கணும்.

எப்ப எடுக்கணும் ? எலக்சனுக்கு முதல் நாள் இல்ல.  ஜனவரி 1ஆம் தேதியில் வெளியிடுவாங்க… இப்ப டிசம்பர் வரப்போகுது.  இப்பதான் நீங்க எல்லாரும் கவனமாக கேட்கணும்.  இதுவரை நான் அரசியல் பேசினேன.  இப்பதான் உங்க Work பேச போறேன்.. நீங்க வந்ததற்கான காரணத்தை சொல்ல போறேன் ? நீங்க செய்ய வேண்டிய வேலையை சொல்ல  போறேன் என தெரிவித்தார்.