செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,   எங்களைப் பொருத்தவரை ஏற்கனவே கழகத்தினுடைய கழகத்தினுடைய பொதுச்செயலாளர்  தெளிவுபடுத்திவிட்டார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று…. அது ஃபுல் ஸ்டாப் வைத்து விட்டோம்.அது முடிந்து போன கதை. முடிந்த கதை தொடர்வது இல்லை.  முடிந்த கதை தொடர்வதில்லை. அதனால் எங்களுக்கு என்ன ?  மத்திய அரசாக இருந்தாலும் சரி,

ஆளும் மாநில அரசாக இருந்தாலும் சரி… அது மக்கள் விடாத போக்கை கடைபிடிக்கும் போது கண்டிப்பாக மக்கள் முன் நாங்கள் எடுத்துச் சொல்லுவோம். அதனால் நாங்கள்  அதில் எந்த காலத்திலும் பின்வாங்க மாட்டோம். திமுகவை சொல்லுறீங்களா ? அவர்களைப் பொறுத்தவரை சந்தர்ப்பவாதம். தேவை என்றால் உடனடியாக என்ன பண்ணுவார்கள் ?  தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். தேவையில்லை என்றால்,  விமர்சனம் பண்ணுவார்கள்.

தேவையில்லை என்று விமர்சனம் பண்ணிவிட்டு,  அவர்களுடன் ரகசிய உறவை வைத்த திமுக மாதிரி ஒரு கில்லாடிதனமான ஒரு சந்தர்ப்பவாத ஒரு பச்சோந்தி தனமான அரசியல் நிச்சயமாக பண்ண முடியாது. அந்த வித்தை எல்லாம் எங்களுக்கு தெரியாது. திமுகவுக்கு மட்டும் தான் அந்த வித்தை தெரியும் என தெரிவித்தார்.