பிக்பாஸ் சீசன்-6 finale சென்ற ஞாயிறுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது. அப்போது பைனலிஸ்ட்டாக விக்ரமன் மற்றும் அஸீம் போன்றோர் வந்தனர். இந்நிலையில் இறுதியில் அஸீம் கையை உயர்த்தி அவர் வெற்றியடைந்ததாக கமல் அறிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ல் வெற்றி வாகை சூடியவர் அஸீம்.

ஆனால் இவர் தனது வாழ்வில் மனைவியையும், மகனையும் பிரிந்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அஸீம் 2018 ஆம் ஆண்டு சையத் சோயா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர்களுக்கு ரய்யான் கரீம் என்ற மகனும் இருக்கிறான். கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற அஸீம் தற்போது தனியாகத்தான் இருக்கிறார்.