பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றும். இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவேற்றி தற்போது  ஏழாவது சீசனில் நுழைகிறது. அதோடு இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு சர்ச்சைக்குரிய பிரபலங்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வழக்கத்திற்கு மாறாக சமூக வலைதளங்களில் பிரபலமாகி விடுகிறார்கள்.

மீடியா பயணத்தை இதிலிருந்து தொடங்குவோம் என நினைக்கும் போட்டியாளர்களுக்கு இது ஒரு  களமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் மூன்று நாட்கள் தான் இருக்கிறது. இரண்டில் ஒன்று பார்த்திடலாம் என்று கமல் கூறியுள்ளார். இந்த காட்சியை மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.