உலகம் முழுவதும் அக்டோபர் 11ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த துன்புறுத்தல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக 15 வயது குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள், இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

மேலும் உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளன. இது போன்ற இன்னல்களை களையும் பொறுப்பு, பெண் குழந்தைகள் எதிர் கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது. இதற்காக தான் உலக பெண் குழந்தைகள் தினம் உருவாக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மூலம் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது.

பிறந்த குழந்தைகள் உட்கொண்டு பெண் குழந்தைகள் பலரும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் அவலத்தை ஒவ்வொரு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.உலகம் முழுவதும் ஏதாவது ஒரு மூலையில் குழந்தைகள் அடைப்பட்டு பாலியல் துன்புறுத்தலில் ஆளாக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்களும் கூறியுள்ளனர்.

இதைவிட வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வருடமும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பத்தாயிரத்திற்கும் மேல் பதிவு செய்யப்படுவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. இது போன்ற செய்திகள் மிகவும் கவலை அளிப்பதாக கூறும் பெண்ணிய போராளிகள், பெண் குழந்தைகளுக்கு உரிதான பாதுகாப்பில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கல்வி, வேலை மற்றும் திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. இவற்றையெல்லாம் போக்கி பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகின்றனர். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயமாக மாற வேண்டும் என்பது பெண்ணியவாதிகள் உள்ளிட்ட அனைவரது கோரிக்கையாகவும் வலியுறுத்தல் ஆகவும் உள்ளது.