பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. முதன் முதலாக சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. பல வழிகளில் இந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் யுனெஸ்கோவின் தரவுப்படி தற்போது 50 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்கின்றனர். இந்த முன்னேற்றம் தொடர்ந்து கொண்டே செல்வதற்கு நாம் நிறைய முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். பல பெண்கள் அவர்களின் கல்வி உரிமையை இன்றும் பெறாமல் உள்ளனர்.

அவர்களின் ஏழ்மை, குழந்தை திருமணம் மற்றும் சிறிய வயதில் கருவுறுதல் போன்ற பல காரணங்களால் இவை தடுக்கப்படுகின்றன. உலக அளவில் இன்னும் 122 மில்லியன் பெண் குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளனர். பெண் குழந்தையை கூடா விடாமல் கல்வி கொடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் 2022 ஆம் ஆண்டு உறுதி அளித்தன. கல்வி மூலமாக பாலின சமத்துவம் என்பதை வலியுறுத்தி யுனெஸ்கோ பெண்களுக்கு ஆக கல்வி வழங்கும் முன்னெடுப்பை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.