பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்,.9 ஆம் தேதி துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த  நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். தற்போது 8 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 86 நாட்களை நெருங்கி இருக்கிறது.

இந்நிலையில் நேற்று வெளியாகிய 3-வது புரோமோவில், ரக்ஷிதா இதுவரைக்கும் என்ன செய்தீர்கள் என அசீம் கேட்கிறார். அதற்கு ரக்ஷிதா “எந்த டாஸ்க்கையும் நான் பண்ணுனத நீங்க பாத்ததே இல்லையா. மேலும் ரீல்முகம் ரியல் முகம் எல்லாமே நான் நடிச்சிட்டேன். இங்கு வந்து நான் நடிக்க வேண்டிய அவசியமில்ல” என வாதிடுகிறார். இதற்கு சரி, இங்கவந்து ஸ்டார்ட் கேமரா இல்லாம நடிச்சிட்டு இருக்கீங்களா என்று அசீம் வெளுத்து வாங்குகிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.