மலையாளத்தில் பிரியா வாரியர் நடித்த “ஒரு அடார் லவ்” திரைப்படத்தை இயக்கி பிரபலமான ஓமர் லூலு இப்போது “நல்ல சமயம்” எனும் திரைப்படத்தை டைரக்டு செய்து உள்ளார். இவற்றில் இர்ஷாத் அலி, விஜீஸ், காயத்ரி சங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் சில நாட்களுக்கு முன் திரைக்கு வந்த நிலையில் படத்தில் போதைப் பொருளை ஊக்குவிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறவில்லை எனவும் சர்ச்சை கிளம்பியது.

அதன்பின் மத்திய கலால் துறை படத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து இயக்குனர் ஓமர் லூலு மற்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நல்ல சமயம் திரைப்படத்தை தியேட்டர்களிலிருந்து வாபஸ் பெறுவதாக படக் குழுவினர் அறிவித்தனர். அதனை தொடர்ந்து தியேட்டர்களில் நல்ல சமயம் திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. கலால்துறை நோட்டீசை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், தீர்ப்பு வந்த பின் படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவேன் எனவும் ஓமர்லூலு அறிவித்துள்ளார்.