சிவகங்கையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் உட்பட பல்வேறு பாடங்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நேரடி நேர்காணல் மூலம் நிரப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பதவி: விளையாட்டு பயிற்சியாளர், செவிலியர், ஆங்கிலம், கணிதம் ஆசிரியர், தமிழ் ஆசிரியர், கணினி ஆசிரியர், கணினி பயிற்சியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்.

பதவி: முதன்மை ஆசிரியர்கள் (PRT), பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் (TGT) மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (PGT), கணினி பயிற்சியாளர் மற்றும் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது.

நேர்காணல்: இப்பணியிடங்களுக்கு வரும் மார்ச் 21 மற்றும் 22-ம் ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு நேரடி நேர்காணல்  நடைபெறுகிறது.

மாத சம்பளம்: 18,000 முதல் 26 ஆயிரத்து 250 வரை

விண்ணப்பங்களை  https://itbpsivagangai.kvs.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்