தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து 107 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. எனினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. இந்நிலையில், தவெக-வின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து பின்வரும் கட்சிகள் தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளன: காங்கிரஸ்: 5 இடங்கள் சிபிஎம் (CPM): 2 இடங்கள் சிபிஐ (CPI): 2 இடங்கள் விசிக (VCK): 2 இடங்கள்

இதன் மூலம் தவெக-வின் பலம் 118-ஆக உயர்ந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுக் கடிதங்கள் முறைப்படி தவெக தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் இதனைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக முஸ்லிம் லீக் கட்சியும் தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்று செங்கோட்டையன் மற்றும் அந்த கட்சியை நிர்வாகி அருண்ராஜ் ஆகியோர் மீண்டும்  காதர் மொய்தீனை சந்தித்து பேசிய நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த ஆதரவு கடிதங்களுடன் நடிகர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதால் நாளைய பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.