தமிழக பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியுள்ளதாக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லிக்கு சென்ற அண்ணாமலை அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் உள்ள அதிருப்தி காரணமாக அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த நிலைமையில் அவர் தேசிய தலைவரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அவரை சமாதானப்படுத்த மூத்த தலைவர்கள் முயற்சி செய்த நிலையிலும் அண்ணாமலை தன்னுடைய ராஜினாமாவை வழங்குவதில் உறுதியாக இருந்ததால் தற்போது ராஜினாமா கடிதம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தலைமை அறிவித்துள்ளது. பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விளக்கியுள்ளார். மேலும் இன்று அண்ணாமலை மனம் திறந்து பேச உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் புதிய கட்சி தொடங்குகிறாரா அல்லது வேறு ஏதேனும் கட்சியில் சேர இருக்கிறாரா என்ற விவரம் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
